Categories
உலக செய்திகள்

இந்த 2 நோயைப்போலவே.. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க… கஷ்டம் தான்… நிபுணரின் கருத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள்…!!

டெங்கு, எச்.ஐ.வி போன்று கொரோனா தொற்றிற்கு மருந்து இருக்காது என உலக சுகாதார நிபுணர் கூறியுள்ளார்

கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வில் இருக்கின்றது. அதில் இரண்டு மனித சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சுகாதாரத் துறை நிபுணர் டெங்கு, ஹெச்ஐவி நோய்களைப் போன்று கொரோனாவிற்கும் மருந்துகள் இருக்காது என தெரிவித்துள்ளார்.

சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி கண்டுபிடிக்கும் மருந்துகள் எதுவும் முன்னேற்றமான பாதையில் போகவில்லை. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகின்றது ஆனால் எந்த மருந்தும் சரியான தீர்வை கொடுக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏறக்குறைய 32 மில்லியன் மக்களை பலியெடுத்த எச்ஐவிகாண மருந்து கண்டறியும் முயற்சி இன்று வரை நடந்து வருகின்றது. வருடத்திற்கு 400000 பேர் பாதிக்கப்படும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

சில நாடுகளில் டெங்கு காய்ச்சலுக்கு மருந்துகள் இருந்தாலும் அவை 9 முதல் 45 வயது வரை உடையவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். இதுகுறித்து தயாரிப்பாளர் சனோபி கூறிய பொழுது “டெங்குவுக்கு தடுப்பு மருந்தை எடுத்து ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் அவர் அதிக அளவு பாதிக்கப் படுவார் என அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து லண்டன் க்ளோபல் ஹெல்த் அட் இம்பெரியல் மருத்துவர் டேவிட் கூறுகையில் “மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் பல வைரஸ்கள் எங்களிடம் உள்ளது.

ஒரு மருந்தை தயாரித்த உடன் அது வெற்றி பெறுமா எனக் கணிக்க இயலாது. பல கட்ட சோதனைகளை கடந்த பின்னரே அது தெரியவரும். ஆக்ஸ்போர்டு தகவல்படி அவர்கள் தயாரிக்கும் மருந்து ChAdOx1 nCoV-19  அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது சார்ஸ் வைரஸிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்படும் மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் 102 குழுக்கள் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிய அனுமதி பெற்று இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |