Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ சேவை கிடையாது…. நேரம் மாற்றியமைப்பு …. மார்ச் 31 வரை இதான் ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ இரயில் சேவை மாற்றியமைக்கப்ட்டுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது.

தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றியமைக்கப்ட்டுள்ளது.நாளை நடைபெறும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என்பதற்காக மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் 23ம் தேதியிலிருந்து மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதில் காலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரையும், காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரையும் , இரவு 8 மணி முதல் 11 மணி வரை மெட்ரோ ரயில் இயங்காது எனவும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரை அத்தியாவசிய பணிக்கு செல்வோர் மட்டுமே மெட்ரோவில் செல்லலாம் என்றும் , கொரோனவை தடுக்கும் வகையில் இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு மார்ச் 31வரை இருக்கும் என்றும் மெட்ரோ தெரிவித்துள்ளது.

Categories

Tech |