பெண் ஒருவர் பணத்திற்காக 15 வயது சிறுமியை 57 வயது நபருக்கு திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த 57 வயது நபரொருவர் சட்டவிரோதமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு தலைமறைவாக உள்ள அந்த 57 வயது நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், சில கடன்களை செலுத்த வேண்டியிருந்த அந்த சிறுமியின் அத்தை சமீபத்தில் அந்த 57 வயது நபரிடம் இருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொகை பெற்றுக் கொண்ட பின்பு சிறுமியை திருமணம் செய்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுமியின் அத்தை, கணவர், மகன், இரண்டு முகவர்கள் மற்றும் மத போதகர் உள்ளிட்ட 6 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மதபோதகரிடம் தவறான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் 57 வயதான நபர் சிறுமியை திருமணம் செய்து கொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் உறவினர் ஒருவர் புகார் அளித்ததையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்திற்காக சிறுமியை 57 வயது நபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.