Categories
தேசிய செய்திகள்

இனி 365 நாட்கள்… 24 மணி நேரமும்… இந்த சேவை தொடரும்… ரிசர்வ் வங்கி அதிரடி..!!

வங்கிக் கணக்கிலிருந்து பெரிதளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை வரும் 14ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் என்ற சேவை ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்த வசதியின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் வங்கி கணக்கில் இருந்து பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை 365 நாட்களும் 24 மணி நேரம் முழுவதும் செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சேவை வரும் டிசம்பர் 14ம் தேதி நள்ளிரவு 14.30 மணி முதல் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |