உலக அளவில் பல கோடி கணக்கான மக்களால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப்புக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாவை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாவில் அதிக அளவில் ரீல்ஸ் வீடியோக்களை பயனாளர்கள் வெளியிட்டார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகமாகி வருகிறது.
அந்த வகையில் இன்ஸ்டா ஸ்டோரியை 60 நிமிடங்கள் வரை பதிவேற்றம் செய்து கொள்ளும் புதிய வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது இன்ஸ்டாவில் சரிபார்ப்பு வசதியானது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது செல்பி வீடியோ மற்றும் ஆதார் அட்டை மூலம் பயனாளர்களின் வயது சரிபார்க்கப்படும். இதன் மூலம் போலியான ஐடிகள் உருவாக்கப்படுவதை தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் போலியான பிறந்த தேதியை வைத்து புதிய அக்கவுண்ட் ஓபன் செய்யப்படுவதும் தடுக்கப்படும்.