Categories
மாநில செய்திகள்

இனி காவலர்களுக்கு விடுமுறை கிடையாது…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!

சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது, வெளிமாநிலங்களில் இருந்து பணம் எடுத்து செல்வதை சோதனை செய்வது போன்ற பணிகளில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார். அவசர தேவைகளை தவிர்த்து மற்ற விடுமுறை கிடையாது என்றும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் ஆணையர் ஐஜி, டி.ஐ.ஜி களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.

Categories

Tech |