ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களுடைய தகுதி அட்டைகளை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம்.
ஆயுஷ்மான் அல்லது பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களுடைய தகுதி அட்டைகளை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். முன்னதாக இந்த அட்டைகளை வாங்குவதற்கு இ-சேவை மையங்களில் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை மத்திய அரசு இரண்டு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது.இருப்பினும் இதற்கான நகல் அட்டைகள் அல்லது மறுமதிப்புகளை வழங்குவதற்கு 15 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது சேவை மையங்களுடன் தேசிய சுகாதார ஒப்பந்தம் செய்துள்ளது.
இதையடுத்து வடிக்கையாளர்கள் தங்களுடைய உரிமை அட்டைகளை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள எந்த ஒரு மருத்துவமனைகளிலும் இந்த அட்டைகளை வாங்கிக்கொள்ளலாம். இலவசமாகக் கிடைக்கும். தற்போது காகித அட்டைகளுக்கு பதிலாக பிவிசி அட்டைகள் வழங்கபடுகின்றது. இந்த அட்டைகள் மூலம், நாட்டிலுள்ள எந்த மருத்துவமனையிலும் உங்களது சிகிச்சையை இலவசமாகப் பெற முடியும்.