Categories
டெக்னாலஜி

இனி ஆன்லைனிலேயே இறப்பு சான்றிதழ் வாங்கலாம்…. எப்படி தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx என்ற இணையதளத்தை திறக்கும் போது விண்ணப்பப் படிவம் ஒன்று கிடைக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைப்பேசி எண்கள், மற்றும் இறந்தவரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இறந்தார், இறப்பிற்கான காரணம், அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும்.

பின்னர் சப்மிட் பட்டனைக் கொடுக்கும் போது உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அவற்றைக் கொண்டு விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். உங்களது தொலைப்பேசி எண்ணைக் கொண்டு மீண்டும் உள்நுழையும் போது இறப்புச் சான்றிதழை ஜெனரேட் செய்ய ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்வது மூலம் இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Categories

Tech |