செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்தமான 3 லட்சத்து 76 ஆயிரத்து 226 மின்மாற்றிகள் இயக்கத்தில் உள்ளன. அதில் குறிப்பாக ஈரோட்டில் 2 மின் மாற்றிகளும், மேட்டூரில் 12, தஞ்சாவூரில் 4, கரூரில் 4, நாமக்கலில் 16, நீலகிரியை பொறுத்தவரையில் 150 மின்மாற்றிகள் என மொத்தம் 188 மின்மாற்றிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதில் மிக அதிகமானது நீலகிரி மாவட்டத்தில் 150 மின்மாற்றிகள் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் 12 இடங்களில் மரம் விழுந்துள்ளது. அந்த மரம் விழுந்த காரணத்தினால் அந்த மரத்தை அப்புறப்படுத்த கூடிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்காக இந்த 150 மின்மாற்றிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய மின் இணைப்புகளில் 5,392 மின் நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த மின் மாற்றிகள் மூலம் மின்விநியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மரம் முழுவதுமாக சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு சீரான மின் மினியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக வரக்கூடிய நாட்களிலும் முழுவதுமாக 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் பணி அமர்த்தப்பட்டு அந்த பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக 24 மணி நேரமும் பணியாற்றக்கூடிய வகையில், மாண்புமிகு முதலமைச்சர் உடைய வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பணியிலே அமர்த்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக 188 மின் மாற்றிகள் தான். அதில், 5392 தான் அதில் குறிப்பாக நீலகிரியில் மட்டும் 150 மின் மாற்றிகள், அதில் 5000 மின் இணைப்புகள் நீலகிரியில் இருக்கு. இந்த பணிகள் முடியும். சீரான மின் வினியோகம் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்படும் என தெரிவித்தார்.