Categories
தேசிய செய்திகள்

இனி தேவையில்லை – மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆறு மாதங்களாக வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களையும் மத்திய – மாநில அரசுகள் தொழில்நுட்ப வடிவில் மாற்றியது. குறிப்பாக கல்வியில் பல்வேறு அம்சங்களை தொழில்நுட்ப ரீதியில் முன்னெடுத்தது.

அறிமுகப்படுத்தியது அந்த வகையில் தற்போது, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கல்வி சான்றிதழ்களை பெற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. அதற்காக முக அடையாள முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டிஜிட்டல் ஆவணங்களை கையாளும் பர்னியாம் மஞ்சுஷா, டிஜிலாக்கர் ஆகிய செயலிகளில், மாணவர்களின் முகம், சிபிஎஸ்இ ஹால்டிக்கெட்டில் உள்ள படத்துடன் ஒப்பிட்டு செய்யப்படும் இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் சான்றிதழ் மாணவர்களின் இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |