பருப்பில்லாத சாம்பார்
தேவையானபொருட்கள் :
பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்னவெங்காயம் – 12
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தக்காளி – 1
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை :
மிக்ஸியில் பொட்டுக்கடலை , சோம்பு , மிளகு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை , சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் , மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் . பின் தக்காளி , மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும் . இதனுடன் அரைத்த விழுது , புளிக்கரைசல் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான பருப்பில்லாத சாம்பார் தயார் !!!