Categories
Tech

இனி எதுக்கும் யூசர் ஐடி, பாஸ்வேர்டு தேவையில்லை…. Google சூப்பர் அப்டேட்…. பயனர்களுக்கு குஷியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு 4ஜி வசதியை வழங்கி வருகின்றது. இதைவிட 5ஜி இணைய சேவை நூறு மடங்கு அதிக வேகத்தில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றன. அண்மையில் 5g சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி,கொல்கத்தா மற்றும் மும்பை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் 5g சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை விரிவு படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூகுள் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தற்போது Google passkey என்ற புதிய அம்சத்தை கூகுள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

ஜிமெயில்,பேஸ்புக் மற்றும் குரோம் போன்ற எந்த ஒரு செயலிகளை நாம் ஓபன் செய்யும்போது யூசர் ஐடி பாஸ்வேர்டு உள்ளிட வேண்டும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு Google pass key என்ற ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டால் மட்டுமே போதும். அதன் மூலமாக நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் செயலிகளை ஓபன் செய்யும்போது விரல் ரேகை திரையில் தோன்றும்.அந்த விரல் ரேகை சென்சாரில் விரலை வைத்த உடன் உடனே லாகின் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த அப்டேட் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |