பொதுவாக ஷாப்பிங் செல்லும்போதோ அல்லது வெளியில் எங்கும் செல்லலும் போதோ கிரெடிட் கார்டை கையில் எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம். இந்த கிரெடிட் கார்டை பயன்டுத்தினால் தொலைந்துபோய்விடுமோ என்ற அச்சமும் இருக்கும் . இந்நிலையில் ஏற்கனவே எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் இ-கிரெடிட் கார்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதையடுத்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் இ-கிரெடிட் கார்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதனால் கிரெடிட் கார்டை இனி கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய வேலை மிச்சம். மேலும் கிரெடிட் கார்டு தொலைந்து விடுமோ என்றும், நம்பர் லீக் ஆகி விடுமோ என்ற கவலை பட தேவை கிடையாது. இதை பயன்படுத்தவேண்டும் என்றால், உங்களுடைய செல்போனில் PNB genie என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்தால் அதில் இ-கிரெடிட் கார்டு என்று இருக்கும். அதை தேவைப்படும் சமயத்தில் உங்கள் செல்போனிலிருந்து கிரெடிட் செய்துகொள்ளலாம்.