Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு யாரும் போக தேவையில்லை – SBI அதிரடி அறிவிப்பு ….!!

இனி யாரும் வங்கிக்கு செல்லாமலே அதன் சேவையை பயன்படுத்திக்கொள்ள வசதியாக SBI வங்கி புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

வங்கி சேவை மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. எதிர்கால நலன் கருதி கையில் அதிகமாக உள்ள பணத்தை சேமித்து வைக்கும் நம்பக தன்மை கொண்ட நிறுவனமாக இருந்து வரும் வங்கி, அதன் சேவையை பொதுமக்கள் பெற புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது வங்கி சேவைக்கான புதிய சேவையை பிரபல வங்கி தொடங்கியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலிலேயே வந்து வங்கி சேவைகளை வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளது. அதன்படி, டெபாசிட், பணம் எடுக்க, கணக்கு அறிக்கை போன்ற பல சேவைகளை வழங்க உள்ளது. இந்த சேவையை பெற மொபைல் எண்ணிலிருந்து வங்கி வேலை நாட்களில் காலை 9 – 4 மணி வரை கட்டணமில்லா எண் 1800011 1103-ஐ அழைக்க வேண்டும். அழைப்பு இணைக்கப்பட்டவுடன் உங்கள் கோரிக்கைகளை கூறி சேவையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |