செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா திமுக என்பது தமிழகத்தில் பிரதான ஒரு எதிர்க்கட்சியாக இன்னைக்கு இருக்கிறது. 37 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தது. பாரதி ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி.
அமித் ஷா, பாரத பிரதமர் சென்னைக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எப்ப பார்த்தாலும், எடப்பாடி பழனிச்சாமி ஏன் பாக்கல என கேட்குறீங்க ? ஏங்க எங்க கட்சி வேற, அவங்க கட்சி வேற. அதை முதல்ல புரிஞ்சுக்குங்க. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பாரத பிரதமர் என்ற முறையில் ஒரு அரசு நிகழ்ச்சி வந்ததால் போய் பார்ப்போம்.
மத்திய அமைச்சர் அமித் ஷா தனிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த போது, அதுல ஏன் போய் எடப்பாடி பழனிச்சாமி பாக்கல ? அப்படினு சொல்லுறீங்க. அவர் கேட்டார் நேரம் கொடுக்கல என்பதெல்லாம் தவறான செய்தி. ஏதாவது வாய்ப்பு இருந்தா நாங்க பார்ப்போம். இல்லைனா பார்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.