தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதால் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போது அவரை ஓபிஎஸ் மட்டும் சந்தித்து பேசினார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமித்ஷாவை சந்திப்பதற்கு அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டபோது பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்பிரதமரை நான் சந்திக்கிறேன். அதற்கான உள்துறை அமைச்சரை எல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தேவைப்பட்டால் மட்டும் சந்திப்போம் என்று கூறியுள்ளார். இது தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காதுகளுக்கு செல்லவே அவர் எடப்பாடி மீது செம டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது. 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை ரத்து செய்வதற்கும் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக ஒரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தற்போது பாஜக மேல் இடத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.