வேலை செய்யாமல் ஊதியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்று முடிவெடுத்துள்ளது
ஜெர்மனியில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அது பலரது ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும் திட்டமாகும். My basic incom என்ற தொண்டு நிறுவனம் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது . திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1200 யூரோக்கள் மூன்று வருடங்கள் வேலையே செய்யாமல் ஊதியமாக வழங்கப்படும். ஊதியம் பெரும் மூன்று வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
அது ஆன்லைனில் அவர்களுக்கு அனுப்பப்படும் படிவங்களில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது. பணம் சம்பாதிப்பதற்கான அழுத்தம் இல்லை என்றால் பலரும் புதுமையாக சிந்திப்பார்கள். மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக எதையும் செய்வார்கள் என்ற நோக்கத்துடனே இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப் படுகின்றது. இவ்வாறு சுலபமாக ஊதியம் பெறுபவர்கள் துணிச்சலாக சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அல்லது வேறு பணியில் ஈடுபட முயற்சிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துபவர்களுக்கு உள்ளது. அதேநேரம் இந்த புதிய திட்டத்தினால் நுகர்வோர் விலையில் எந்த அளவிற்கு மாற்றம் ஏற்படும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனிடையே இந்த புதிய திட்டத்திற்கு அரசியல்வாதிகளிடம் இருந்து வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ எதிர்ப்புகள் வரத்தொடங்கி விட்டன.