சிம்பு நடிப்பில் வெளியான ‘குத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா. இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் சினிமாவில் பிசியாக இருக்கும்போதே கடந்த 2012-ம் ஆண்டு காங். கட்சியில் இணைந்து அரசியலிலும் பிசியானார். இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார்.
அதன்படி, தனது ‘ஆப்பிள் பாக்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் 2 படங்களை ரம்யா தயாரித்து வருகிறார். இதுதவிர ஓடிடி தளங்களுக்காக வெப் சீரிஸ்களை தயாரிக்க உள்ள ரம்யா, நடிகையாகவும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.