கடந்த எட்டு வருடங்களில் இந்தியாவில் எரிபொருள் விலையானது மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி அடைந்ததால் பெட்ரோல் டீசல் விலையினை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ற பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்று பூரி தெரிவித்துள்ளார். கடந்த 200 நாட்களாக பெட்ரோல் விலை ஏற்றப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர், 48 ஆண்டுகளில் பெட்ரோல் விலை இப்போதுதான் ஏற்றப்படாமல் இருக்கிறது என்றார்.