செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஒரு நிர்வாக திறமையற்ற அரசாகத்தான் பார்க்கிறோம். திறமையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற போது, இப்படிப்பட்ட செயலில் ( தற்கொலை ) மாணவர்கள் ஈடுபட மாட்டார்கள். அதில் அம்மாவுடைய அரசு சரியான முறையில் செயல்பட்டு அந்த விலை மதிக்க முடியாத மாணவர்களுடைய உயிர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம்.
இன்றைக்கு கூட போதை பொருள். எங்கு பார்த்தாலும் போதை பொருள் தாரளமாக கிடைக்கிறது. நானும் ஊடகத்திலும் சொன்னேன், பத்திரிகையிலும் சொன்னேன், சட்டமன்றத்திலும் பேசினேன். அனைவரும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று… . யார் அரசாங்கம் ? திராவிட முன்னேற்றக் கழக அரசு. திரு ஸ்டாலின் முதலமைச்சர், அவர்தான் அந்த அதிகாரத்தை வைத்து இதை கட்டுப்படுத்த முடியும்.
அந்த அதிகாரம் அவருக்கு தான் இருக்கிறது. ஆகவே இன்றைக்கு காவல்துறை நினைத்தால் நிச்சயமாக இந்த போதை பொருளை தடுக்கலாம். ஆனால் தமிழகத்தின் உடைய முதலமைச்சர் செயலற்ற முதலமைச்சர், திறமை இல்லா முதலமைச்சரின் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற காரணத்தினால், போதை பொருள் சர்வ சாதாரணமாக எல்லா பக்கமும் கிடைக்கிறது. தினம் தோறும் பார்த்தால் செய்திகள் பார்த்தால், அங்கே போதை பொருள் பிடித்தார்கள்.. இங்கே போதை பொருளை பிடித்தார்கள் என்கின்ற செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.
இதனால் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்ற நிலை ஏற்படுகிறது. போதைப்பொருளை பயன்படுத்துகின்ற மாணவர்கள், இளைஞர்கள் பெரும்பாலும் பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது, சரியான முறையில் சட்ட ஒழுங்கை பாதுகாத்தால் இதை நிச்சயமாக தடுத்து நிறுத்தலாம் என தெரிவித்தார்.
மேலும், முன்னாள் முதல்வருக்கு கடற்கரையில் 89 கோடி ரூபாய் செலவில் கடற்கரையில் பேனா சின்னம் வைப்பதாக தமிழக சொல்லி இருக்கிறார்கள். தமிழக அரசு தொடர்ந்து நிதி பற்றாக்குறை என்று சொல்கிற இந்த நேரத்தில் இது தேவையா ? மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இது எல்லாம் சொன்னால் அரசியல் ஆக்குவார்கள் தம்பி என கூறிய எடப்பாடி,
இதையெல்லாம் நாட்டு மக்கள் உணர்ந்தால் சரி. என்னுடைய கருத்து என்னவென்றால் மறைந்த தலைவர் அவர், சொன்னால் வேண்டுமென்றே விமர்சனம் சொல்வார்கள். அடுத்த நாளே ஒரு அறிக்கை வரும். அது ஏன் தேவை இல்லாத கருத்தை சொல்லி, தேவையில்லாத விமர்சனத்தை வாங்கிகொள்ள வேண்டும். நாட்டு நடப்பை உணர்ந்து, நிதி நிலையை உணர்ந்து, அவரவர்கள் செயல்பட வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து என எடப்பாடி கூறினார்.