எலைட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி பால் செபஸ்டின் பேராதரவில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தன்னிகரில்லா ஆத்மார்த்த உழைப்பிலும் பெரும் முயற்சியில் முனைவர் படையல் சிவக்குமார் உலக சாதனை நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. Flame off no oil- no boil என்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி ஆத்மார்த்த சீடரும் விஞ்ஞானியுமான டாக்டர் சி அழகர் ராமானுஜம் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சியில் இயற்கை காய்கறிகள், தெய்வீக மலர்கள், மூலிகைகள், பாரம்பரிய மற்றும் சிறுதானிய அவல் வகைகள் பழங்கள் போன்ற உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி அடுப்பில்லாமல் எண்ணெய் இல்லாமல் பால் மற்றும் பொருட்கள் இல்லாமல் எந்த வித ரசாயனங்களும் இல்லாமல் no oil no boil என்னும் முறையில் சுவைமிகு பாரம்பரிய லட்டு வகைகள் உயிராற்றல் மிகுந்த தானிய பயிர் வகைகள், காய்கறி பிரட்டல் வகைகள், காய்கறி சாண்ட்விச் வகைகள், காய்கறிகளில் பசும் பொரியல் வகைகள், சிறுதானிய மற்றும் புட்டு பாரம்பரிய வகைகள், சிறுதானிய கிச்சடி எண்ணெயில் பொரிக்காத வடை, வேகவைத்த பாரம்பரிய கொழுக்கட்டை, இயற்கை பாரம்பரிய கலவை, சாதங்கள் சுவையும் ஆற்றல் மிகுந்த பாதம் பிசின் மற்றும் மலர்களில் பாயாச வகைகள் பால் இல்லாத இயற்கை சைவ மோர் வகைகள் போன்ற பிரம்மாண்டமாய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரில் இருந்து வருகை தந்த மாணவர்களுடன் எலைட் பள்ளியின் பெரும்பான்மையான மாணவர்களும் சேர்ந்து 319 மாணவர்கள் 319 இயற்கை உணவு வகைகள் 4.27 நிமிடங்களில் இயற்கை உணவு வகைகள் வகைவகையாய் வண்ணமாய் அடுப்பில் என்ன இல்லாமல் சமைத்து உலக சாதனை படைத்திருக்கின்றார்கள். மேலும் இந்த உலக சாதனையை triumph உலக சாதனை நிறுவனம் மதிப்பீட்டு செய்து உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த நிலையில் வருங்கால தலைமுறைக்கான குழந்தைகள் அதிலும் மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவு முறை இயற்கை வாழ்வியல் முறை பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு முறையை அறிமுகப்படுத்தி பின்பற்ற செய்ய வேண்டிய இந்த மாபெரும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
Categories