Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக அபகரிக்க முடியாது; ஓபிஎஸ் அறிக்கை

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பு வந்ததை அடுத்து அவர் ,  அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், மக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது. கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நம்பிக்கை உண்மையானது:

அந்த அறிக்கையில், தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளைநம்பினேன்; தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமாற நம்பிய நாட்டு தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்;

இவையாவிற்கும் மேலாக தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன்; இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாக இருக்கிறது.

வீழ்ந்து போவார்கள்:

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாராலும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும்,  தொண்டர்களும், பொதுமக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது. கழக நிறுவனர் புரட்சித் தலைவர் அவர்கள் வகுத்தடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி கழகத்தின் ஒற்றுமை நிலை நிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எக்குக்கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும்; வெற்றி நடை போடும் என்பது திண்ணம்.

 

 

 தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே எனும் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருமந்திரத்தை இதயபூர்வமாக…

கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் என்றைக்கும் நம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும், அரவணைத்து செல்வேன்;

கழகத்தின் கசந்த காலம்

இனி வசந்த காலங்களாக மாறும்

அண்ணா நாமம் வாழ்க

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க

புரட்சித்தலைவி அம்மா நாமும் வாழ்க -என்று

தனது அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |