Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியை யாராலும் நெருங்க முடியாது”….. அதுக்கு காரணம் 3 விஷயம் மட்டும்தான்….. இயக்குனர் வம்சி புகழாரம்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சங்கீதா, மீனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வாரிசு படம் குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தில் உருவாவதோடு இதுவரை பார்க்காத ஒரு புதிய விஜயை படத்தில் பார்க்கலாம் எனவும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் வம்சி அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் விஜய் ஒரு சிறந்த மனிதர். அவரை யாராலும் நெருங்க முடியாது.  நடிகர் விஜய் இவ்வளவு உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம்  நேர்மை, உழைப்பு, ஒழுக்கம், பேஷன் போன்றவைகள் மட்டும்தான். மேலும் விஜய் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |