வாடகை கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் யாரும் தொல்லை கொடுக்க கூடாது என டெல்லி முதலவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ்ஸை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தினம் தோறும் மாலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்து டெல்லியின் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசி வருகின்றார்.
இதில் பல்வேறு நிவாரண நலத்திட்ட உதவிகளையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றார்.மேலும் மக்களுக்கு அத்தியாவசியமான என்னென்ன தேவை இருக்கிறது தொடர்பாக கேட்டறியப்பட்ட பல்வேறு விஷயங்களுக்கு விளக்கமும் அளித்து வருகின்றார்.
டெல்லியில் வசிக்கக் கூடியவர்கள் பெரும்பாலானவர்கள் வாடகைக்கு இருப்பவர்கள் என்பதால் வீட்டு உரிமையாளர்கள் பலரும் வாடகைக் கேட்டு தொல்லை தருவதாக டெல்லி அரசாங்கம் கொடுத்திந்த டோல் ஃப்ரீ நம்பருக்கு ஏராளமானோர் புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வீட்டு உரிமையாளர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தலை கொடுத்துள்ளார். அதில் நீங்கள் யாரும் வாடகை கேட்டு தொல்லை செய்ய வேண்டாம். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நிலைமை சரியானதும் அவர்களாகவே வாடகையை கொடுத்து விடுவார்கள்.
அப்படி இல்லை என்றால், கொடுக்க முடியாதவர்களின் வீட்டு வாடகையை டெல்லி அரசாங்கம் கொடுக்கும். நீங்கள் கவலைப்பட தேவையில்லை, இரண்டு மூன்று மாதங்களுக்கு பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்து இருக்கின்றார். டெல்லி முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.