Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாரும் வெளியே வராதீங்க…. உங்க வீட்டுக்கே பணம் வரும்….. முதல்வர் உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி ..!!

1000 ரூபாய் நிவாரண தொகை வீட்டிற்க்கே வந்து வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்கவில்லை, முழுமையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் போது கூட பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க மாநில முதல்வர்களை அறிவுறுத்தினார். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு மீறியதாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை அறிவித்துள்ள சூழலில் ரேஷன் கடைகளில் மக்கள் சமூக விலகலை பின்பற்றாமல் கூட்மாக கூடி வந்தனர். இதனால் கொரோனா தொற்று வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவி வந்த நிலையில் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் டோக்கன் கொடுக்கும்போது வீட்டுக்கே வந்து தரப்படும் என்ற முக்கியத்துவமான உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் அதன்பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |