Categories
உலக செய்திகள்

யாரும் நம்பாதீங்க…அது ஒரு “வதந்தி” தகவல்… சுகாதார அமைச்சர் விளக்கம்…!

இந்தியாவின் தடுப்பூசியை தென்னாப்பிரிக்கா திருப்பி அனுப்பப் போவதாக வெளியான தகவல் ஒரு வதந்தி என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜகா இணைந்து தயாரிக்கும் கொரோனா  தடுப்பூசியை, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா, “கோவிட் ஷில்டு”என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்களை  தென்னாபிரிக்கா வாங்கி பரிசோதனை செய்தது.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் தடுப்பு மருந்து குறைந்தபட்ச பலனை அளித்தது. அதனால் அவர்கள் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தினர். அதன்பின், இந்தியாவில் இருந்து பெறப்பட்ட தடுப்பு மருந்துகளை தென்னாப்பிரிக்கா, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் , இது ஒரு வதந்தி தகவல் என்றும், தடுப்பூசிகளை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டம் ஏதும் இல்லை என்று தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் ஸ்வேலி கிஸி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கோவிஷில்டு தடுப்பூசிகளை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |