தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு, நமக்கு நாமே ஆறுதல் அடைந்து, எதையாவது பிடித்துக் கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியது தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் செல்வராகவன் யாரை பற்றி சொல்லி இருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு ,நமக்கு நாமே ஆறுதல் அடைந்து ,எதையாவது பிடித்து கொண்டு ,நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்.
— selvaraghavan (@selvaraghavan) December 14, 2022