Categories
சினிமா மாநில செய்திகள்

“என் உடல் நலம் குறித்து யாரும் வதந்தியை பரப்பாதீர்கள்”….. நடிகர் சரத்குமார் தரப்பிலிருந்து பரபரப்பு விளக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் இருக்கும் சமத்துக்குமார் உடல்நல பிரச்சனையின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேள்விப்பட்ட சரத்குமாரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் சரத்குமாரின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு தற்போது அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் மருத்துவமனைக்கு ஒரு சிறிய பரிசோதனைக்காக சரத்குமார் சென்றிருந்தார். அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நிறைவடைந்ததால் பூரண குணத்தோடு சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். எனவே சரத்குமாரின் உடல்நிலை குறித்து யாரும் தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக சரத்குமாரின் உடல்நலம் குறித்து பரவிய தகவல்கள் பொய் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |