திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் 50 வருடங்களுக்கு முன்னாடி பிள்ளையார் சிலையை உடைச்சாரு. அன்னைக்கு இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இன்னைக்கு அந்த சொரணை நம்ம கிட்ட இல்லை. ஒரு விமர்சனம் கூட யாரையும் தாக்கியது இல்லை. அவர் சொன்னதை ராசா திருப்பி சொன்னார், வேற ஒண்ணுமே சொல்லல.
மனுதர்மம் என்றால் என்ன ? பிராமணன் என்றால் யார் ? வைஷ்ணவர் என்றால் யார் ? சத்திரியன் என்றால் யார் ?சூத்திரன் என்றால் யார்? சூத்திரன் என்பதற்கு அடுத்த சொல்லுங்கள், உங்கள் மனுதர்மத்தில் தானே சொல்கிறது என்று சொன்னார் ராசா. இதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் பிராமணர் கிடையாது, அதை தெரிஞ்சுக்கோங்க. எவனுக்காக நாம போராடுறோமோ, அவன் தான் ரோட்ல நின்னு குரல் கொடுக்கிறான். வயிறு எரியுமா ? எரியாதா நமக்கு ?
இவனுக்கு ஓட்டு உரிமை கொடுத்து, பதவி கொடுத்து, ஒரு காலத்துல சென்னை கார்ப்பரேஷன் உடைய கவுன்சிலர் யார் இருந்தார் ? ராஜா ஸ்ரீ முத்துவேல் செட்டியார் இருந்தார், யூ கிருஷ்ணாராவ் இருந்தார், தராசாரி என்று இருந்தார். இன்றைக்கு ஏழுமலையையும், குப்பனும், சுப்பனும், முனியனும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த சமதர்மத்தை நாட்டிலே கொண்டு வந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை மறந்து விடக்கூடாது என தெரிவித்தார்.