செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ஜூலை மாதம் 23-ஆம் தேதி தாமிரபரணி தியாகிகளுக்காக அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்ச்சியும், செப்டம்பர் மாதம் 11-ம் தேதி தியாகி எம் இன்னமானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சியும், கடந்த 30 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எங்களுடைய இந்த அரசியல் ரீதியான, சமூக ரீதியான கடமையாற்றுவதற்கு தடை செய்யக்கூடிய வகையில் பல்வேறு விதமான சம்பவங்கள் நடந்து வருகின்றது.
குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்பாகவே ஜூலை மாதம் 23-ஆம் தேதிக்கு முன்பாக தென் தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய காவல்துறை பல கிராமங்களுக்கு சென்று கிராமங்களில் இருக்கக்கூடிய பெரியோர்களை ”நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு போகக்கூடாது” என்று அவர்களிடத்திலே கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள். இளைஞர்களிடத்திலே யாரெல்லாம் போகிறார்கள் என போட்டோ எடுக்கிறார்கள்.
அதேபோல தான் செப்டம்பர் 11 தியாகி இன்னமானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இது புதிய தமிழகம் கட்சியால் 1993 முதல் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை… புதிய தமிழகம் கட்சிக்கு மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரை ஒதுக்கப்படுவது தான் நாங்கள் தொடர்ந்து செய்யக்கூடிய நடவடிக்கை. ஆனால் அதே நேரத்திலே வேறு பல அமைப்புகளையும் உள்ளே விட்டு, நாங்கள் மதியம் ஒரு மணிக்கு கிளம்பி 70 கிலோமீட்டர் மட்டும் இருக்கக்கூடிய அந்த தூரத்தை கடப்பதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேலாக பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.
அதேபோல ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மது, புகை, போதை பொருட்கள் ஒழிப்புக்காக நாங்கள் வந்து இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தோம். ஜூலை 23ஆம் தேதி மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு பர்மிஷன் கேட்டிருந்தோம். எங்களுடைய இதுபோன்ற சமூக கடமை மற்றும் அரசியல் ரீதியான எல்லா விதமான நடவடிக்கைகளுக்கும் பெரிய அளவில் முட்டுக்கட்டைகளையும், அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் ஏவப்படுகிறது என தெரிவித்தார்.