Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டாம்…! ADMKக்கு செல்வாக்கே இல்லை.. களமிறங்கிய எம்.ஜி.ஆர் கால கோஷ்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, ஈபிஎஸ், ஓபிஎஸ்யை நம்பி, அண்ணா திமுகவிற்கு யாரும் வரவில்லை. எம்ஜிஆர்யை  நம்பி அண்ணா திமுகவில் வந்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை நம்பி அண்ணா திமுகவிற்கு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அண்ணா திமுக தொண்டன் எம்ஜிஆர் புகழையும்,  ஜெயலலிதா அம்மா அவர்களின் புகழையும்,  இரட்டை இலை சின்னத்தை நம்பி தான் களத்தில் இருக்கிறார்கள்.

அண்ணா திமுக தொண்டர்கள் நினைப்பது,  நாங்கள் கிராமத்திற்குள், எங்கள் பூத்துக்கு போகின்ற போது திமுகவை விட அண்ணா திமுக வலிமையானது இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே ஒழிய,  அது ஈபிஎஸ்ஸா இருக்கணும், ஓபிஎஸ்ஸா இருக்க வேண்டும் என நினைக்கல. இவர்கள் யாருமே செல்வாக்கு பெற்ற தலைவர்களாக இல்லை.

இபிஎஸிற்காக எவ்வளவு பேர் அண்ணா திமுகவில் சேர்ந்தார்கள் ? ஓபிஎஸ்காக  எத்தனை பேர் அண்ணா திமுகவில் வந்து சேர்ந்தார்கள் ?  இபிஎஸ் கட்சியிலிருந்து வெளியே போனவர்கள், ஓபிஎஸ்எல் கட்சியில் இருந்து வெளியே போனவர்கள் இதுதான் இருக்கே ஒழிய, புதிய  வரவுகள் இல்லை. யார் இருக்கிறார்களா இல்லையோ, இவர்களுக்கு சுயநலம் இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி என்பவர் அண்ணா திமுக வளர்ச்சிக்காக போராடவில்லை,  தான் முதலமைச்சராக வரவேண்டும், தான் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று போராடுகிறார். ஓ பன்னீர்செல்வம் என்ன போராடுகிறார் ? தான் ஒருங்கிணைப்பாளராக தொடர வேண்டும், குறைந்தபட்சம் துணை முதலமைச்சர் ஆக இருக்க வேண்டும். தன்னுடைய மகன் மீண்டும் மத்திய அமைச்சராக இருக்கணும் என போராடுகிறார்.

ஆனால் எங்களது போராட்டம், நாங்கள் எம்ஜிஆர் உடன் பயணித்து வந்தவர்கள்.  அவர் உருவாக்கிய இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். அண்ணா திமுக வின் அடிப்படை தொண்டர்களது முடிவுகள் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கி தான் நாங்கள் பயணிக்கின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |