Categories
தேனி மாவட்ட செய்திகள்

சொந்த வீடு இல்ல… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… திமுக பொறுப்பாளர் மனு…!!

தேனி மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல் தவித்து வரும் மக்களின் சார்பில் திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு சொந்த வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வீடு கேட்டு தனித்தனியாக மனு அளித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 40 ஆண்டிற்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து குடிசை மாற்று வாரியத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில் இலவச வீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இலவச வீடுகள் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |