Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டினர் யாருக்கும் கொரோனா இல்லை – தென்கொரியா

தென்கொரியாவில் உள்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு அதிவேகமாகப் பரவிய கொரோனா தென்கொரியாவில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் முறையான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல் போன்றவற்றினால் கொரோனா தொற்றை மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தது அந்நாடு.

தென்கொரியாவில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தடம் பதித்த கொரோனா தொற்று நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 247 பேர் மரணமடைந்தனர். இந்நிலையில் நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் அந்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் வெளிநாட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நான்கு பேரும் சீனா, அமெரிக்கா, ஆசிய நாடுகளிலிருந்து தென் கொரியாவிற்கு வந்தவர்கள் என தெரிவித்துள்ளது. அதி வேகமாக பரவிய கொரோனா தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி உலக நாடுகள் பலவற்றிற்கு உதாரணமாக தென்கொரியா விளங்குகிறது. அதோடு தொற்று பரவல் நெருக்கடியிலும் ஏப்ரல் 15ஆம் தேதி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |