தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார்.
இந்நிலையில் இதுகுறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், காய்கறிகள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கிடங்குகள் செயல்பட அனுமதி. ஊழியர்களை அலுவலகம்/ வீட்டுக்கு அழைத்துச்செல்லும் பொதுபோக்குவரத்து வாகனங்கள் இயங்க அனுமதி. அத்தியாவசிய சேவைகள், அரசுப் பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் செயல்படும் உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதி; ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்படத்தடை டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி.
மேலும் தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.