Categories
மாநில செய்திகள்

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது – முதலமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை!

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என மோடியிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மரணம் அடைவோர் எண்ணிக்கை குறைவு, கொரோனா பாதிப்பில் ஏற்படும் மரணம் தமிழகத்தில் 0.67 சதவீதம் மட்டுமே என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறது.

61 ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அந்தந்த மாநில முதலமைச்சர்கள் ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன் என்றும் தகவல் அளித்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான செலவையும் ஈடுகட்ட நிதி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |