Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு அனுமதியும் இல்லை… சப்-கலெக்டர் கண்ணில் பட்ட லாரிகள்… வசமாக சிக்கிய 6 பேர்..!!

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல் செய்த நிலையில் அதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிசிப் நேற்று தேனி நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது தேனி புறவழி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அப்பகுதிவழியாக 3 டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த சப்-கலெக்டர் உடனடியாக அந்த லாரிகளை நிறுத்து சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து லாரி டிரைவர்களிடம் மணல் அள்ளியதற்கு அனுமதி சீட்டு கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவர்களிடம் முறையான அனுமதி சீட்டு இல்லாத நிலையில் சட்ட விரோதமாக மணல் அள்ளியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மணல் அள்ளிவந்த 3 லாரிகளை பறிமுதல் செய்து பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி டிரைவர்கள் முருகேஸ்வரன், வினோத், எட்டப்பன் மற்றும் லாரி உரிமையாளர்கள் சரவணகுமார், சரவணன், சோலைராஜ் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |