கையெழுத்து போட தெரியாதவர்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என்று கூறியதால் பார்ப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலம் மூலமாக வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னை, சோழிங்கநல்லூர், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தஞ்சை, பாபநாசம் ஆகிய இடங்களிலும் கையெழுத்து போட தெரியாதவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க முடியாது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.