தமழகத்தில் மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கியதால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாமென தமிழ்நாடு மின்சாரவாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் படிப்பிற்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மின்சாரத்துறையும் இதில் இணைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் எந்த மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடை செய்ய வேண்டாம் என்று பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அனைத்தும் முடியும் வரை நீட்டித்துள்ளது. அதுவரையிலும் ஏதேனும் ஒரு பகுதியில் அவசர பராமரிப்பு கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பட்சத்தில், அந்தப் பகுதிகளில் மட்டும் உயரதிகாரிகளின் அனுமதியோடு மின்சாரத்தை துண்டித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.