கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினமும் மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெறாது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்கள் குறித்து தினமும் மாலை மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதில் நாடு முழுவதும் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை, உயிரிழப்பு விவரங்கள் மற்றும் மாநில வாரியாக விவரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
தினமும் மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெறாது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதால் ரத்து செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தற்போதைய சூழல் குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.