Categories
சினிமா தமிழ் சினிமா

வில்லியாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை…. காஜல் அகர்வால் பேட்டி…!!

வில்லியாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முன்னணி நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் சில நாட்களுக்கு முன்பு அவரது காதலனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் காஜல் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “திருமணத்திற்குப் பின்னர் எனக்கு அதிக மரியாதை தருகின்றனர்.

இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் திருமணத்திற்கு பின்பு தான் என் அம்மாவின் கஷ்டத்தை நான் புரிந்து கொண்டேன். எனது கணவரும் நானும் பத்து வருடங்களுக்கு முன்பு நண்பர்களாகத் தான் பழகினோம். அதன் பிறகு எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனால் ஊரடங்கில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.

திருமணத்திற்கு பின்பும் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. சினிமா கதைகளை தேர்வு செய்வதிலும் வித்தியாசம் பார்ப்பதில்லை. மேலும் காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.வில்லியாக நடிக்க வேண்டும் என்றாலும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முக்கியமாக அந்தக் கதை பிடித்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |