தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தை பொருத்த வரை டாஸ்மாக் விவகாரத்தில் 2 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. கடந்த 6ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் நிபந்தனையுடன் திறக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். பின்னர் 8ஆம் தேதி அந்த நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என சொல்லி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரதான அமர்வு கொடுத்த அந்த உத்தரவை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செல்லும் என்று 3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதாவது மது வாங்க ஆதார் கட்டாயம், ஒருவருக்கும், மற்றொருவற்கும் இடையே சமூக இடைவெளி இவ்வளவு இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்தான் வர வேண்டும். ஒருநாளைக்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் போன்ற நிறைய கட்டுப்பாடுகளை சென்னை உயர் நீதிமன்றமே வழங்கி இருந்தது. இந்த உத்தரவுக்கு தற்போது இடைக்காலத் தடை என்பது விதிக்கப்பட்டிருக்கிறது.
டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் எப்படி இயங்க வேண்டும், எவ்வாறு இயங்க வேண்டும், என்னென்ன முறைகள் இயங்க வேண்டும், என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்னென்ன ? போன்ற அனைத்து விஷயங்களையும் தமிழக அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்றும், இது சம்பந்தமான சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த அத்தனை உத்தரவுகளும் இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே தமிழக அரசின் சார்பில் நாளை தினம் டாஸ்மாக் கடைகளில் அதிக கூட்டம் சேராமல் இருப்பதற்கும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கும் புதிய விதிமுறைகளை அரசே வகுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் எப்போதும் போல டாஸ்மாக் கடைகள் இயங்கலாம். இது முழுக்க முழுக்க தமிழக அரசின் கையில் தான் இருக்கின்றது. இதன் மூலம் குடிமகன்களுக்கு இனி எந்த கட்டுப்படும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.