Categories
அரசியல்

மீத்தேன் திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை தடுப்பதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஆனது நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனை அடுத்து பல்வேறு கட்சிகள் தேர்தல் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் . மேலும் தங்களது தேர்தலுக்கான அறிக்கைகளையும்  வெளியிட்டு வருகின்றனர் இதனையடுத்து திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி தோழமைக் கட்சிகள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் இதில்  மக்களுக்கு உதவும் வகையில் ஏராளமான நலத்திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன .

இதனை அடுத்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் விதமாக மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் தடை செய்து அதனை முற்றிலுமாக தடுப்பதற்கான வழிமுறைகளை செய்வோம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கடுமையான விமர்சனம் செய்துள்ளார் அவர் கூறியதாவது,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் தான் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்தானது போடப்பட்டு செயல்படுத்தப்பட்டது தற்பொழுது கையெழுத்துப் போட்ட திராவிட முன்னேற்ற கழகம் அதனை தடுப்போம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும், தேர்தலுக்காக முக ஸ்டாலின் அவர்கள் வேடமிடுகிறார் என்றும், கையெழுத்து இட்ட திராவிடர் கழகமே அதனை தடுப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்வோம் என்று கூறுவதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பாஜக தமிழகத்திற்கு செய்தது என்ன என்று ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பாஜக தமிழகத்திற்கு செய்ததை  பட்டியலிட்டு கூற முடியும் என்றும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று உள்ளது கன்னியாகுமரியில் சாலை வசதிகளை மேம்படுத்தும் விதமாக பாலங்கள் திறக்கப்பட்டுள்ளது மேலும் மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான அடிக்கல் நாட்டு விழா என்பது நடைபெற்றுள்ளது என்று பட்டியலிட்டு சிலவற்றை குறிப்பிட்டார்..

Categories

Tech |