அரசு ஊழியர்கள் விட்டுக்கொடுக்கும் விடுமுறைக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஈட்டிய விடுப்புக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையும் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழக ராசு தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.