Categories
தேனி மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு இல்லை… அடிப்படை வசதிகள் இல்லை…. “சின்னசுருளி” அருவிக்கு சிறப்பு திட்டங்கள் வருமா….? எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள்…!!!!!!

சின்னச் சுருளி அருவியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றார்கள்.

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே சுருளிஅருவி இருக்கின்றது. இந்த அறிவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் இங்கே சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருக்கின்றது. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. அருவிக்கு செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்படும். அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை.

மக்கள் பாதுகாப்புக்காக குளிப்பதற்கு இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அதுவும் வெள்ளப்பெருக்கின்போது  சேதம் அடைந்தது. மேலும் அருவியில் கழிப்பிட வசதி, நீண்ட தூரம் இருந்து வரும் மக்களுக்கு உணவு வசதி, உடை மாற்றம் செய்யும் அறை என எதுவும் இல்லை. இங்கே உள்ளாட்சி அமைப்பு சார்பாக வாகனங்களுக்கு 20 முதல் 100 வரை நுழைவு கட்டணமும் வனத்துறை சார்பாக ஒரு நபருக்கு 30% நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. இப்படி வசூல் செய்தும் அங்கு அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு வசதிகளும் ஏதும் இல்லை. ஆகையால் சின்னச் சுருளி அருவியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றார்கள்.

Categories

Tech |