Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனி அறை இல்லை… அதனால் தான் இந்த முடிவு… மரத்தில் தனிமைப்படுத்திக்கொண்ட இளைஞன்…!!

தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞன் மரத்தின் மேல் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெலுங்கானாவில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கொத்தன்கொண்டா கிராமத்தில் சிவா என்ற 25 வயதான இளைஞன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் சிவா  வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதனையடுத்து அவரது வீட்டில் தனி அறை இல்லாத காரணத்தினால் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது கட்டிலை கட்டி அங்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு தேவையான உணவு, மருந்து ஆகியவை அவரது குடும்பத்தினர் கயிற்றின் மூலம் வழங்கி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் அவருக்கு உதவ முன் வந்த நிலையில் அந்த உதவிகளை மறுத்த சிவா  தற்போது 3வது நாளாக மரத்தில் தங்கியுள்ளார்.

Categories

Tech |