செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்திய விதத்தை பார்த்து நீதிமன்றமே அந்த கூட்டத்தையும் ரத்து செய்தது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது, தற்காலிக பொதுச் செயலாளர் என்று எடப்பாடி சொன்னாரே, அவரே பட்டம் சூட்டிக்கொண்டாரே, அந்த பதவியும் ரத்து செய்யப்பட்டது.
உண்மையான ஒரு மனிதராக இருந்தால் சூடு, சொரணை எல்லாம் இருக்குமேயானால், இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் ? கட்சியில் நீதிமன்றம் சொன்ன பிறகு, நாம் அம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டோம் என்று கூறி, கட்சியை விட்டு வெளியே சென்று இருக்க வேண்டும், இல்லை என்றால் அமைதியாக இருக்க வேண்டும்.
ஆனால் எந்த ஒரு வெட்கம் இல்லாமல், மானம் இல்லாமல், சூடு – சொரணை இல்லாமல் எடப்பாடி ஆகட்டும், கே.பி முனுசாமி ஆகட்டும், ஜெயக்குமார் ஆகட்டும், சண்முகம் ஆகட்டும் இன்னும் அவரோடு இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு இன்னும் இந்த கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் கட்சியை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று எல்லோரும் வரவேண்டும் என்று அழைத்த போது, நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்று சொன்னார்கள்.
இன்றைக்கு 90 சதவீத தொண்டர்கள் அதை நியாயம் என்று ஏற்றுக்கொண்டு அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்களோடு இல்லங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் வருகிறார்கள். அதை பார்த்து பயந்து இவர்கள் தொண்டர்களை திசை திருப்புவதற்காக விரக்தியில்.. ஆயிரம் கோடி செலவு செய்தும் பதவி வரவில்லை என்ற விரக்தியில்..
எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய கைத்தடிகளாக பயன்படுத்துகின்ற கேபி முனுசாமி போன்றவர்களை வைத்து, தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பேட்டி கொடுக்க வைத்து பேசி வருகிறார். இது அவருக்கும் அழகல்ல, தயவுசெய்து நீங்கள் இப்படி நடப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என விமர்சித்தார்.