கொரானா வைரஸ் பாம்புகளிடம் இருந்து பரவியது என முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக இந்த வைரஸ் வௌவ்வாலில் இருந்துதான் முதலில் பரவிய இருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு இதுவரை 1600 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 68,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்று கூறப்பட்டு வந்தது. சீனாவின் ஷாங்காய் நகரில் மொத்த விற்பனை சந்தையில் இருந்து இந்த வைரஸ் பரவுகியது என கருத்து பரவியது.
பின்பு சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் இந்த வைரஸ் பாம்புகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் இந்த கொரானா வௌவ்வாலில் இருந்துதான் மனிதர்களுக்கு வந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் எறும்புத்தின்னி மூலமாகவும் பரவுகிறதா என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.