செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விட்டாலும் பரவாயில்லை, ஆனால் எங்களுடைய அம்மாவுடைய அரசில், முதலமைச்சராக இருந்த கழகத்தினுடைய பொதுச் செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கொடுக்கப்பட்ட பல்வேறு ஏழை எளிய பெண்களுக்கு, முதியோர்களுக்கும், மாணவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் கொடுத்த திட்டங்களை நிறுத்தி இருக்கிறது, முடக்கி இருக்கிறது.
குறிப்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அதை ரத்து செய்திருக்கிறது. இதுவரை ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் நெருங்கப் போகிறது இன்னும் மாணவர்களுக்கு மடிக்கணினி இந்த அரசால் வழங்குவதற்கு துப்பில்லை, திறனில்லை. அதனுடைய அமைச்சர் உதயநிதியினுடைய ரசிகர் மன்றத்தின் ஒவ்வொரு தியேட்டராக சென்று டிக்கெட் விற்றுக் கொண்டிருக்கிறார்.
இப்படி பல்வேறு திட்டங்களை, அரசு ஊழியர்கள் கொடுத்த சலுகைகளை இந்த அரசு நிறுத்தி இருக்கிறது, கொடுக்க மறுக்கிறது. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை செய்ய தவறியிருக்கிறது, இப்படி ஏற்கனவே நடைமுறையில் இருந்தத திட்டங்களை நடைமுறைப்படுத்த தவறி இருக்கின்ற இந்த அரசு. அதுகூட பரவாயில்லை இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாத காலத்திலே அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து இருக்கிறது, கடுமையாக விலைவாசி உயர்ந்து இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடனே 150 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தப்பட்டுள்ளது,
கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த மக்களை அம்மாவுடைய அரசு, எங்களுடைய முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி 2 ஆண்டு காலம் சிறப்பாக இந்த நாட்டை கையாண்டு, சிறப்பான முறையில் நடத்தினார்கள். ஆனால் இன்று பால் விலை உயர்ந்து இருக்கிறது, அத்தியாவசிய பொருட்கள் கட்டுமான பொருள்கள் உடைய விலைவாசி உயர்ந்திருக்கிறது.
இன்றைக்கு சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, அதற்கெல்லாம் உச்சமாக இன்றைக்கு மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது, 500 ரூபாய் மின் கட்டணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் ஆயிரம் ரூபாய் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தலில் இவர்கள் என்ன சொன்னார்கள் ? மாதம் மாதம் மின் கட்டணத்தை நாங்கள் கணக்கெடுப்போம் என்று சொன்னார், செய்தாரா?
செய்ய விட்டாலும் பரவாயில்லை, இன்றைக்கு அதைவிட கொடுமை மின்சார கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறார். மக்களை வஞ்சித்திருக்கிறார், பழிவாங்கிக் கொண்டிருக்கிறார். தானும் தன் குடும்பம் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று சொல்லி இந்த அரசு வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.