Categories
உலக செய்திகள்

விபத்துகுள்ளான சீன விமானம்…. 2 நாட்கள் கடந்தும்…. கேள்விக்குறியான பயணிகள் நிலை….!!!

விபத்து நடந்து சுமார் 2 நாட்கள் கடந்த நிலையில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாநிலத்திலிருந்து போயிங் 737-800 விமானம் 132 பேருடன் குவாங்சு மாநிலத்துக்கு சென்றது. அப்போது எதிர்பாரத விதமானக விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் அதில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் தெற்கு சீனாவில் நடைபெற்ற இந்த விபத்தை குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், ராணுவ வீரர்கள் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “விபத்து நடந்து சுமார் 36 மணி நேரத்தை கடந்து விட்டதால் விமானத்தில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். மேலும் விமானத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால் விபத்துக்கான காரணம் பற்றி கண்டறிவது கடினமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்

Categories

Tech |