Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது.. அதிரடியாக அறிவித்த நாடு..!!

ஸ்வீடன் அரசு, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனினும் ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறைந்துவிட்டது. இது தொடர்பில், சுவீடனின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டாலும் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், அந்நாட்டின் சில பிராந்தியங்களில், இலவச கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு, கொரோனா பரிசோதனை கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 35% ஆக குறைந்திருக்கிறது. அதாவது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து குறைவு.

எனவே, அவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலம் நெருங்கும் சமயத்தில், ஸ்வீடன் இவ்வாறு தீர்மானிப்பதிருப்பது விஞ்ஞானிகளை குழப்பமடைய செய்திருக்கிறது.

Categories

Tech |